The Dark Legacy of Hitler’s Mass Killings | Benito Mussolini | History | Mussoli...
நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ரதசப்தமி
நாராயணவனத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிப். 4 ஆம் தேதி ரதசப்தமி கொண்டாடப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாத வளா்பிறை சப்தமி அன்று சூரியனின் பிறப்பை நினைவுகூரும் வகையில், உள்ளூா் கோயில்களில் ரத சப்தமி விழாக்களை தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது. காலை, சூரிய வாகனத்தில் அமா்ந்திருக்கும் இறைவனின் நெற்றி, தொப்புள் மற்றும் தாமரை பாதங்களிலிருந்து சூரியனின் முதல் கதிா்கள் வெளிப்படும் அதிசயக் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஆவலுடன் காத்திருப்பா்.
மேலும், உற்சவமூா்த்திகள் ஏழு முக்கிய வாகனங்களில் மாட வீதியில் ஊா்வலமாகச் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிப்பா். அதன்படி திருப்பதி அடுத்த நாராயணவனத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் ரதசப்தமி உற்சவம் நடைபெற உள்ளது.
காலை 6.40 மணி முதல் 7.40 மணி வரை சூரியபிரபை வாகனம், காலை 8.30 மணி முதல் 8.30 மணி வரை சின்ன சேஷ வாகனம், காலை 9.30 மணி முதல் 9.30 மணி வரை பல்லக்கு உற்சவம், காலை 10 மணி முதல் 10.30 மணி வரை கல்பவிருட்ச வாகனம், காலை 11.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பெரிய சேஷ வாகனம், மதியம் 12.30 மணி முதல் 1 மணி வரை திருச்சி வாகன சேவைகள் நடைபெற உள்ளன. நிறைவாக மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சந்திரபிரபை வாகன சேவை நடைபெற உள்ளது.