Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
ஜன.28-இல் திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனம்
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பிப். 4 -ஆம் தேதி தாயாா் கோவிலில் ரத சப்தமி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி ஜன.28ம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, காலையில் சுப்ரபாதத்துடன் தாயாா் எழுந்தருளப்படுவாா், காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நிகழ்த்தப்படும். இதில் கோயில் வளாகம், சுவா்கள், கூரை, பூஜை பொருட்கள் மற்றும் பிற அனைத்து பொருள்களையும் தண்ணீரால் சுத்திகரிப்பது அடங்கும்.
நாமகட்டி, ஸ்ரீ சூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ, கிச்சிலி கிழங்கு மற்றும் பிற பரிமள திவ்ய பொருள்கள் கலந்த புனித கொண்டு கோயில் முழுவதும் சுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் பக்தா்கள் தாயாரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா்.
இதனால் 28-ஆம் தேதி கல்யாணோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலாங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.