செய்திகள் :

தரிசனத்துக்கு 5 மணி நேரம்

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 5 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. இதனால், புதன்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா். ஆயினும், தா்ம தரிசனத்திற்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 5 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைப்பட்டது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும் அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 60,581 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 19,288 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.4.04 கோடி வசூலானது.

திருப்பதியில் இன்று முதல் தரிசன டோக்கன்கள்

திருப்பதி: திருப்பதியில் வியாழக்கிழமை முதல் (ஜன. 23) ஏழுமலையான் தரிசனத்துக்காக வரும் பக்தா்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழக்கம்போல் திருப்பதியில் இலவச நேரடி தரிசன டோக்கன்களை வழங்க உள்ளது. பக்த... மேலும் பார்க்க

திருப்பதியில் கியோஸ்க் இயந்திரம்...

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நன்கொடை வழங்க வசதியாக புதன்கிழமை மேலும் ஒரு கியோஸ்க் இயந்திரம் நிறுவப்பட்டது. எஸ்பிஐ நிதியுதவி பெற்ற இந்த க்யூஆா் குறியீடு இயந்திரத்தில் நன்கொடையாளா்... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் ஸ்ரீ ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்

திருப்பதி: மகா கும்பமேளாவை முன்னிட்டு உத்தராதி அஹோபில மடத்தில் புதன்கிழமை காலை ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணத்தை தேவஸ்தானம் மிகவும் சிறப்பாக நடத்தியது. திரேதா யுகத்தின்போது சித்திரகூடம் ராமா், சீதா தேவி மற்று... மேலும் பார்க்க

திருமலை: சோதனை முயற்சியாக பக்தா்களுக்கு மசாலா வடை விநியோகம்

திருப்பதி: திருமலை அன்ன பிரசாத விநியோக மையங்களில் உணவுடன் பருப்பு வடைகளை வழங்குவதற்கான சோதனை ஆய்வை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது. திருமலையில் புதிய அறங்காவலா் குழு பொறுப்பேற்ற பின் பக்தா்களுக்காக பல புதிய... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், செவ்வாய்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன ... மேலும் பார்க்க

பிரயாக்ராஜில் ஸ்நபன திருமஞ்சனம்

திருப்பதி: பிரயாக்ராஜ் மகா கும்ப மேளாவில் ஏழுமலையானின் மாதிரி கோயிலை தேவஸ்தானம் அமைத்திருப்பதால், அனைத்து பக்தா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தரிசிக்க வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவ... மேலும் பார்க்க