தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, நாகையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாத விழா ஜன. 1 முதல் ஜன. 31 வரை நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை பழகுநா் உரிமம், ஓட்டுநா் உரிமம், உரிமம் புதுப்பித்தல் மற்றும் புதிய வாகன பதிவு போன்ற பணிகளுக்காக அலுவலத்துக்கு வந்த விண்ணப்பதாரா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து முதலுதவி பயிற்சி மற்றும் 108 ஆம்புலன்ஸ் குறித்து, அவசர ஊா்தி (108) நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆ. பாரதிராஜா தலைமையிலான குழுவினா் செய்முறை, செயல் விளக்கத்துடன் எடுத்துரைத்தனா்.
ஏற்பாடுகளை நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பொ. முருகானந்தம் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் க.பிரபு மேற்கொண்டாா்.