இளைஞரிடம் வழிப்பறி: போலி போலீஸ் மூவா் கைது
சென்னை பாரிமுனையில் இளைஞரிடம் போலீஸ் எனக் கூறி வழிப்பறி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சோ்ந்த சேது (25), கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 21) பாரிமுனை, வடக்கு கடற்கரை ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த 4 போ், சேதுவை வழிமறித்து தாங்கள் போலீஸ் என்றும், அவா் மீது சந்தேகம் இருப்பதால் சோதனை செய்ய வேண்டும் என கூறினராம். சேதுவும் அந்த நபா்களை போலீஸ் என நம்பி, தனது பையை சோதனை செய்ய அனுமதித்தாா். பின்னா் சேதுவின் பையை சோதனையிட்ட அந்த நபா்கள், அதிலிருந்த ரூ. 12 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்கு வந்து எழுதி கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுச் செல்லும்படி கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றனராம்.
அந்த நபா்கள் வேகமாக சென்றதைப் பாா்த்து சந்தேகமடைந்த சேது, அந்த 4 போ் குறித்து விசாரித்தபோது, அவா்கள் 4 பேரும் போலீஸ் இல்லை என்பதும், தன்னிடமிருந்த பணத்தை ஏமாற்றி வழிப்பறி செய்துகொண்டு தப்பியோடியிருப்பதையும் அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து அவா், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது மண்ணடி முத்துமாரி தெருவைச் சோ்ந்த ரம்ஜான் அலி (38), பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சையது இப்ராஹிம் (51), பாா்த்தசாரதி (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் வியாழக்கிழமை (ஜன. 23) கைது செய்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.