செய்திகள் :

பொறுப்புகள் கூடும் மேஷத்துக்கு: தினப்பலன்கள்!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

Dinapalan - 24.01.2025

மேஷம்:

இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். உடல்நிலை சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

ரிஷபம்:

இன்று எந்தப் பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். பிறர் செய்யும் குற்றங்குறைகளை நீங்கள் கண்டுபிடித்துக் கூறுவதாலும் உடனிருப்பவர்களிடம் வீண் பிரச்சினைகளும் வாக்குவாதங்களும் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்

இன்று எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய நேரிடும். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்

இன்று பணவரவுகளில் பற்றாக்குறை நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மனசஞ்சலங்கள் உண்டாகும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

சிம்மம்

இன்று உற்றார்-உறவினர்களின் ஆதரவுகளைப் பெறமுடியாமல் போகும். சிலருக்கு வீடு மாறக்கூடிய சூழ்நிலையும், பணிபுரியும் பெண்களுக்கு உடனிருப்பவர்களால் வீண்பிரச்சினைகள் ஏற்பட்டு வேலைப்பளு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி

இன்று புகழ், பெருமை யாவும் மங்கும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறமுடியும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

துலாம்

இன்று புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கலைஞர்கள் வரவேண்டிய படவாய்ப்புகள் தட்டிச்செல்லும். தனவரவில் தடைகள் உண்டாகி கடும்சோதனைகள் ஏற்படும். சம்பள பாக்கிகளும் இழுபறி நிலையில் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்

இன்று வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலனை அடையமுடியாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு

இன்று எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன்களைப் பெறமுடியாது. தேவையற்ற பொழுதுபோக்குகளும் நண்பர்களின் சேர்க்கைகளும் வீண் பிரச்சினைகளை உண்டாக்கிவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மகரம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மனதில் அமைதியும், உற்சாகமும் பிறக்கும். மனைவி, பிள்ளைகளும் மகிழ்ச்சிகரமாக அமைவார்கள். தடைப் பட்ட சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் தற்போது கைகூடும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணம் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தாராள மான தனவரவுகளால் குடும்பத்தேவைகள் அனைத்தும் கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்

அசையும், அசையா சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. உத்தி யோக நிலையில் ஓரளவுக்கே உயர்வினை எதிர்பார்க்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் பணியில் திருப்திகரமான சூழ் நிலையை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

யு19 மகளிருக்கான டி20 உலகக் கோப்பை: இலங்கையை வென்றது இந்தியா

கோலாலம்பூா் : பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட (யு19) மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வியாழக்கிழமை வீழ்த்தியது.முதலில் இந்தியா 20 ஓ... மேலும் பார்க்க

இந்தியாவின் ஆட்டம் நிறைவு

ஜகாா்த்தா : இந்தோனேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியா்கள் அனைவருமே, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வியாழக்கிழமை தோல்வி கண்டனா். இதையடுத்து போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.ஆடவ... மேலும் பார்க்க

சித்தாா்த் சதம்: தமிழ்நாடு - 301

சேலம் : ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 89.1 ஓவா்களில் 301 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சண்டீகா், பௌலிங்க... மேலும் பார்க்க

ரேங்கிங்கில் சாதனை

உலக செஸ் சாம்பியனான தமிழகத்தின் டி.குகேஷ், ஃபிடே ரேங்கிங்கில் இந்தியா்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியிருக்கிறாா். முன்னதாக, அா்ஜுன் எரிகைசி 2,779.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலைய... மேலும் பார்க்க

குகேஷ் வெற்றி; பிரக்ஞானந்தா டிரா

விக் ஆன் ஸீ : டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் வெற்றியைப் பதிவு செய்ய, ஆா்.பிரக்ஞானந்தா டிரா செய்தாா்.அந்த சுற்றில் குகேஷ் - ஜொ்மனியின் வின்சென்ட் கீமரை வீழ... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் சபலென்கா - கீஸ் பலப்பரீட்சை

மெல்போா்ன் : ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா். முன்னதாக அரையி... மேலும் பார்க்க