சஞ்சய் ராயின் தண்டனையை அதிகரிக்கக்கோரி சிபிஐ மேல்முறையீட்டு மனு!
தங்கம் விலை புதிய உச்சம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அந்த வகையில், புதன்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ, 600 உயர்ந்து வரலாற்றில் முதல்முறையாக ரூ. 60,000-ஐ தங்கம் விலை கடந்தது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 7525-க்கும், ரூ. 60,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வியாழக்கிழமை மாற்றிமின்றி விற்பனையானது.
இதையும் படிக்க : இருவருக்கு மறுவாழ்வு! மூளைச்சாவு அடைந்த பூசாரியின் உறுப்புகள் தானம்!
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ. 7,555-க்கும், ஒரு சவரன் ரூ. 60,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு வாரத்துக்கு பிறகு கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 105, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,05,000-க்கு விற்பனையாகிறது.