ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி
’சின்ன மருமகள்’ ஒளிபரப்பு நேரம் மாற்றம்! அய்யனார் துணை சீரியல் எப்போது?
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், சின்ன மருமகள் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
எதிர்நீச்சல் தொடரில் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மதுமிதா நடிக்கும் அய்யனார் துணை தொடர் வரும் ஜன. 27 ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை மதுமிதா அய்யனார் துணை என்ற புதிய தொடரில் நாயகியாக நடிக்கிறார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் சேஜு நடிக்கிறார்.
இதையும் படிக்க: ஓடிடியில் வெளியானது திரு. மாணிக்கம்!
நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி(மதுமிதா), கூட்டு குடும்பத்தில் அவர் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக இருக்கும் என முன்னோட்டக் காட்சியின் மூலம் தெரிகிறது.
இத்தொடர் எதிர்நீச்சல் தொடருக்கு போட்டியாக ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
அதேபோல், இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சின்ன மருமகள் தொடர், இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.