செய்திகள் :

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி

post image

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று(ஜன. 24) நடைபெற்றது.

மின்வாரியத்தின் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள் பங்கேற்று தங்களது மின்வட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர்..

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது,

கோடைக்காலத்தில் தடையற்ற மின் விநியோகம் வழங்குவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 6,534 புதிய மின்மாற்றிகளை மாற்ற திட்டமிடப்பட்டு, அவற்றில் 5,407 மின் மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன.

புதிய மின் இணைப்புகளை காலதாமதமின்றி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோடைக்காலத்தில் 22 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு உச்சபட்ச மின் தேவை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம்: குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேர் யார்?

ஸ்மார்ட் மீட்டர்களுக்கு புதிய ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. விரைந்து புதிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.

மின்வாரியத்தில் ஓய்வு பெறுவோரின் வயதை அதிகரிப்பது குறித்து மின்வாரியம் எந்த முடிவும் எடுக்கவில்லை. செவிவழி செய்திகளைச் செய்தியாக்க வேண்டாம்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

14, 500 மெகாவாட் அளவு புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்கு விரைவில் டென்டர் கோரப்படும்.

மாதாந்திர மின் கணக்கீடு விரைவில் உறுதியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும். தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை தொடங்கும்.

இந்த ஆண்டு கோடையில் தாழ்வழுத்த மின்சாரப் பிரசனைகள் கண்டிப்பாக இருக்காது எனக் கூறினார்.

இளம் தம்பதி சுட்டுக்கொலை! கொலையாளி தப்பியோட்டம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் கணவன் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கொலையாளி தப்பியோடியுள்ளார்.ஜெய்பூரின் சங்கனெர் சதார் பகுதியிலுள்ள சாந்தி விகார் காலனியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 26), இவர் தனது மனைவி ... மேலும் பார்க்க

உரிமையாளர் மர்ம மரணம்! உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்!

ருமேனியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த உரிமையாளரின் உடலை அவரது வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டுள்ளன.ருமேனியாவைச் சேர்ந்த அட்ரியானா நியாகோ (வயது 34) என்ற பெண் தனது வீட்டில் இரண்டு பக் வகை நாய்... மேலும் பார்க்க

வளர்ப்புப் பூனையால் வேலையை இழந்த பெண்!

சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் வளர்ப்புப் பூனையின் செயலினால் பெண் ஒருவர் தனது வேலையை இழந்துள்ளார்.சீனாவின் சோங்கிங் மாகாணத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் இந்த மாதம் துவக்கத்தில் அவர் பணிப்புரியும் நி... மேலும் பார்க்க

7 ஆம் வகுப்பு மாணவன் பலி!ஆசிரியர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ஆசிரியர் தாக்கியதில் 7 ஆம் வகுப்பு மாணவன் பலியாகியுள்ளான்.சோனிட்பூர் மாவட்டத்தின் சிராஜுலி பகுதிலுள்ள தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் கடந்த ஜன.22 அன்று அமன் குமார் என்ற ... மேலும் பார்க்க

புலி தாக்கியதில் பெண் தொழிலாளி பலி!

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் புலி தாக்கியதில் காபி தோட்டத்தின் பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.வயநாட்டின் மனந்தாவடி பகுதியிலுள்ள தனியார் காபி தோட்டத்தில் அங்கு பணிப்புரியும் ராதா (வயது 45) என்ற... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்! - விசிக, மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல்

வேங்கைவயல்வழக்கைசிபிஐவிசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க