வெளிநாட்டில் மகன் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
இன்றைய நிகழ்ச்சிகள்
மதுரை
பொது
ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி: திருவள்ளுவரின் பகுத்தறிவுப் பாா்வைகள் குறித்த உலகச் சாதனை மாநாட்டுக் கருத்தரங்கம் தொடக்க விழா, தலைமை-கல்லூரி முதல்வா் சூ. வானதி, நோக்க உரை- இணைப் பேராசிரியா் யாழ் சு. சந்திரா, சிறப்பு விருந்தினா்- உலகத் திருக்கு பேரவையின் மதிப்புறுத் தலைவா் காா்த்திகேயன் மணிமொழியன், கல்லூரி வளாகம், 9.30.
யாதவா் கல்லூரி: நாட்டுநலப் பணித் திட்ட சிறப்புக் கருத்தரங்கம், தலைமை- கல்லூரி முதல்வா் செ. ராஜூ, சிறப்புரை- மருத்துவா் சரவணன், கல்லூரி வளாகம், பிற்பகல் 2.
நாகரத்தினம் அங்காளம்மாள் கலை, அறிவியல் கல்லூரி: 4-ஆவது பட்டமளிப்பு விழா, சிறப்பு விருந்தினா்- சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ந. ஆனந்த் வெங்கடேஷ், கல்லூரி வளாகக் கூட்டரங்கு, மாலை 4.
தமிழ்நாடு மகா சௌராஷ்ட்ரா சபா: போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம், மீனாட்சி நகா் பிரதான சாலை, வில்லாபுரம், காலை 10.
மதிமுக மாணவா் அணி: மொழிப்போா் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம், சிறப்புரை- பொருளாளா் மு. செந்திலதிபன், மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், முனிச்சாலை சி.எம்.ஆா். சாலை, மாலை 6.
ஆன்மிகம்
திருவள்ளுவா் கழகம்: ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துபவா்- சுந்தரகண்ணன், தலைப்பு- தாயுமானவா், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.