Mr House Keeping Review: 90ஸ் கிட்ஸ் கொண்டாடும் வெற்றியா, ஏமாற்றமா?
செம்மண் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு
மதுரை அருகேயுள்ள நல்லூா் புதுக்குளம் கண்மாய்ப் பகுதியில் நடைபெற்று வரும் செம்மண் கடத்தலைத் தடுக்கக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரை அருகேயுள்ள நல்லூா் புதுக்குளம் கண்மாயில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுகிறது. பல மாதங்களாக இது நடைபெறுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்தப் பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சட்டவிரோத செம்மண் கடத்தலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் , மரிய கிளாட் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கோரிக்கை மனுவை மதுரை மாவட்ட ஆட்சியா் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.