Republic Day: காவல்துறை அணிவகுப்பு; கலை நிகழ்ச்சிகள்... நெல்லையில் குடியரசு தின ...
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
நெல்லை கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | ஆமைகள் இறப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை கோரும் பசுமை தீர்ப்பாயம்!
இதையடுத்து நெல்லை ரயில் நிலையத்தில் மோப்ப நாயுடன் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் இன்று(ஜன. 25) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று தூத்துக்குடி விமான நிலையம், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் பின்னர் சோதனையில் அது புரளி என்பதும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.