குறுகிய காலத்தில் நிறைவடையும் பிரபல தொடர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3.30 மணிக்கு வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில் திரவியம் ராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். ஈரமான ரோஜாவே தொடரைத் தொடர்ந்து, இத்தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதா சிவதாஸ் நடித்து வருகிறார்.
வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் கண்ணன் என்ற பாத்திரத்தில் நடிகர் அவினாஷ் நடித்து வருகிறார். இத்தொடரில் வில்லியாக பாண்டவர் இல்லம் தொடரில் மல்லிகா பாத்திரத்தில் நடித்த நடிகை ஆர்த்தி நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: சர்ச்சை பேச்சு... மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!
கூட்டுக் குடும்பத்தில் உறவுகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளே இத்தொடரின் மையக்கரு. இத்தொடரை பாரதி கண்ணம்மா, ராஜா ராணி தொடர்களை இயக்கிய பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.
வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுகூட ஆகாத நிலையில், இத்தொடர் நிறைவடையவுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரின் பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.