தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த ஜனவரி 22ஆம் தேதி முதன்முறையகாக தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,000ஐ தாண்டி மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று (ஜன.27ஆம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,540க்கும் ஒரு சவரன் ரூ. 60,320க்கும் விற்பனையாகியது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்!
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,220க்கும், ஒரு சவரன் ரூ.49,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.104க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.