ஆமை: தனிமை விரும்பிகள், மனிதனுக்கு மூத்தவை -ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!
அசாமில் கடத்தப்பட்ட கஞ்சா கோவையில் பறிமுதல்: இருவர் கைது!
அசாம் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவை கோவை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்து, இருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.
வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக ரயில்களில் கஞ்சா கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனைத் தடுக்க கோவை ரயில்வே போலீஸார் வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் அடிக்கடி அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை ரயில் நிலையத்துக்கு அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் வந்து நின்றனது.
அந்த ரயிலில் கோவை ரயில்வே போலீஸ் போலீஸார் ஒவ்வொரு பெட்டியாக ஏறி சோதனை செய்தனர். அதில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முணன்னு பின் முரணாக பதில் அளித்து உள்ளனர். இதனால் போலீஸார் அவர்களது பையை சோதனை செய்தனர்.
அதில் அவர்களது பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதை அடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் மணிப்பூர் மாநிலம் தொபால் பகுதியை சேர்ந்த நவுசத் கான் (22), முகமது முஜிபூர் ரகுமான் (27) என்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்த கஞ்சாவையும், பிடிபட்ட நவுசத் கான், முகமது முஜிபூர் ஆகியோரை ரயில்வே போலீசார், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்கள் யாரிடம் இருந்து கஞ்சாவை எங்கு இருந்து வாங்கி கடத்தி வந்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்க முன்பு இதே ரயிலில் 8 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.