செய்திகள் :

ஆமை: தனிமை விரும்பிகள், மனிதனுக்கு மூத்தவை -ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!

post image

ஆமைகள் மிகவும் வயதான தோற்றத்தைக் கொண்டிருக்கும். எதாவது ஆபத்து வந்தால் தனது ஓட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்ளும்.

மிகவும் மெதுவாக இயங்கும். பெரும்பாலும் கிழங்கு, தண்டு, இலைகளை உண்ணும். வெகு சில கடலாமைகள் மாமிச உண்ணிகளாகவும் இருக்கின்றன.

நிலத்திலும் நீரிலும் வாழும் திறனைப் பெற்றிருக்கும். நிலத்திலும் நன்னீரிலும் வாழும் ஆமைகளை tortoises எனவும் கடல் நீரிலும் கடற்கரையிலும் வாழும் ஆமைகளை Turtle எனவும் அழைப்போம் என்பது போன்ற அடிப்படையான விஷயங்களை நாம் அனைவருமே அறிவோம்.

ஆனால் ஆமைகள் இந்த உலகில் இருக்கும் அதிசயமான உயிரினங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது ஏன் தெரியுமா?

ஆமைகள் பழமையானவை

டைனோசர் காலத்தில் வாழ்ந்த சில உயிரினங்கள் தான் இப்போதும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

பெரும் அழிவுகளில் இருந்த தப்பிப்பிழைத்த அந்த சில உயிரினங்களில் ஆமையும் ஒன்று.

ஆமைகள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த உலகில் வாழ்கின்றன. இது பாம்புகள், பல்லிகள், பறவைகளை விட நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

ஆமை

ஆமைகள் எல்லா நிலத்திலும் வாழும்

உலகில் அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டஙளிலும் ஆமைகள் வாழுகின்றன.

தமிழில் கூறப்படும் ஐந்திணைகளிலும் ஆமைகள் வசிக்கின்றன.

கடலில் வாழும் அமைகள் முட்டையிடுவதற்காக நிலத்துக்கு வரும். இப்படி செய்யும் உயிரினங்களுக்கு 'அமினோட்ஸ்' என்று பெயர். முட்டைகள் வளரும்போது முட்டையில் உள்ள சவ்வு வழியாக சுவாசிக்கும். நீருக்குள் இருந்தால் இது நடக்காது.

அத்துடன் கரையில் இருந்தால் முட்டைகள் பொறித்து குஞ்சுகள் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சில ஆமைகள் முட்டையிடுவதற்காக கூடு கட்டும் வழக்கமும் கொண்டிருக்கின்றன. ஆமை குஞ்சுகள் வாழ்க்கையில் ஒருபோதும் தங்கள் பெற்றோரைச் சந்திப்பதில்லை.

ஆமை ஓடுகளின் மர்மம்

ஆமைக்கு கடினமான ஓடுகள் எங்கிருந்து வருகின்றன? எப்படி அது உருவானது என்ற குழப்பம் பலருக்கும் இருந்திருக்கும்.

ஆமை ஓடுகள், அதன் உடலின் இன்றியமையாத பாகம். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட 50 எலும்புகளால் (சராசரியாக) ஆனது ஆமை ஓடு.

கார்டூன்களில் காட்டுவதுபோல ஒருபோதும் ஆமைகளின் ஓட்டைப் பிரிக்க முடியாது.

ஆமை ஓடு

ஆமைகள் தனிமை விரும்பிகள்

ஒரு குழுவாக ஆமைகள் செல்வதனை ஆங்கிலத்தில் Creep என அழைக்கின்றனர்.

பெரும்பாலும் ஆமைகள் தனியாக தான் இருக்க விரும்புகின்றன. காதல், இனப்பெருக்க காரியங்களுக்காக மட்டுமே அவை ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கின்றன.

ரிட்லி வகை ஆமைகளை முட்டையிடும் காலத்தில் மட்டும் மொத்தமாக பார்க்கலாம். தி ஃபைண்டிங் நீமு படத்தில் வருவதுபோல குடும்பம் குடும்பமாகவோ மந்தையாகவோ ஆமைகள் திரிவதில்லை.

ஆமைகள் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் இருக்கும்

ஆமைகள் தங்கள் ஓட்டுக்குள் செல்வதற்கு முன் நன்றாக மூச்சை விட்டு நுரையீரலை காலி செய்துகொள்ளும், ஏதாவது அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுக்குள் புகுவதற்கு முன்னர் நன்றாக மூச்சு விடுவதைக் கவனிக்கலாம். பின்னர் ஆக்ஸிஜனுக்காக நீண்ட நேரம் கழித்து வெளியில் வரும்.

கடல் ஆமைகளும் கூட மூச்சு விடுவதற்காக மேலே வந்து செல்லும். அதிகபட்சமாக சில ஆமை இனங்கள் 2 மணிநேரம் வரை மூச்சு விடாமல் கடலுக்குள் இருக்கும்.

ஆமை

ஆணா? பெண்ணா?

மற்ற விலங்குகளை போல எளிதாக ஆமைகளின் பாலினத்தைக் கண்டுபிடிக்க முடியாது.

அவை குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டியப் பின்னரே ஆணா பெண்ணா எனத் தெரியவரும்.

பொதுவாக அதன் ஓட்டு முடிவு பெண் ஆமையை விட ஆண் ஆமைக்கு வளைவாக அமைந்திருக்கும்.

ஆண் ஆமை பெரிதாக வாலுடனும், நீளமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இத்தனை நீளமாக இருந்தால் ஆண் எனக் குறிப்பிட்ட வளர்ச்சியைக் கொண்டு சொல்லிவிட முடியாது.

முகரும் தொண்டை

பல ஊர்வன இனங்களைப் போலவே ஆமைகளும் தொண்டை வழியாக முகர்ந்து மணங்களை அறிகின்றன.

கடலுக்குள் செல்லும் ஆமை குஞ்சுகள்

அசைவ ஆமைகள்

ஆமைகள் பெரும்பாலும் சைவ உணவுகளையே உண்ணும் என்பதை நாம் அறிவோம். சில கடலாமைகள் ஜெல்லி மீன்கள், கணவாய்களை உண்கின்றன. ஆனால் சிறு வயதில் பெரும்பாலான ஆமைகள் பூச்சிகளை உண்ணும் அசைவ உண்ணிகளாகவே இருக்கின்றன. வளர வளர சைவ உணவுக்கு மாறிவிடுகின்றன.

நில மற்றும் நீர் வாழ் ஆமைகள் சேர்த்து உலகில் 300-க்கும் மேற்பட்ட ஆமையினங்கள் உள்ளன. அவற்றில் 126 இனங்கள் அழியும் நிலையில் உள்ளதாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

நீண்ட ஆயுட்காலம்

உள்ளங்கை அளவுள்ள ஆமைகள் முதல் ஜெயண்ட் ஆமைகள் வரை எல்லாமும் நீண்ட நாட்கள் வாழ்பவை. ஜோனதன் என்ற நிலவாழ் ஆமைதான் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் அதிகபட்சமாக 192 ஆண்டுகள் உயிருடன் இருந்துள்ளது.

ஜோனதன்

ஐரோப்பிய நாடுகளில் ஆமைகளை குடும்ப பிராணியாக வளர்க்கும் பழக்கம் உள்ளது. குடும்ப பெண்கள் வழிவழியாக அவற்றை வளர்ப்பர். பாட்டி அல்லது பூட்டி வளர்க்கத் தொடங்கிய ஆமை பேத்தியின் காலத்தைத் தாண்டியும் வாழ்வதுண்டு.

உலகில் நீண்டகாலம் வாழ்ந்த கடலாமை 400 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லை.

Wayanad : இறந்த புலியின் வயிற்றில் பெண்ணின் தலைமுடி, கம்மல்! - வனத்துறை சொல்வதென்ன?

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மானந்தவாடி பகுதியைச் சேர்ந்த ராதா என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு புலி தாக்கிக் கொன்றது. அவரின் உடல் பாகங்களையும் அந்த புலி தின்றுள்ளது. அடுத்தடுத்து மனிதர்களை தாக... மேலும் பார்க்க

கோவை: ரேஷன்அ​ரி​சியைத் தேடி வீட்டுக்குள் நுழைந்த யானை - பதறிய வட மாநில தொழிலாளர்கள்..!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்புப் பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வேலுமணி என்... மேலும் பார்க்க

``யானை – மனித மோதலை தவிர்க்க ஏ.ஐ கேமரா தொழில்நுட்பம்'' -களமிறங்கிய மலை கிராமம்

கோவை மாவட்டம் முழுவதுமே யானை – மனித மோதல் பிரச்னை அதிகரித்து வருகிறது. அதிலும் மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் யானை மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக... மேலும் பார்க்க

மரக்காணம்: உப்பளத்தில் முகாம்; மீன்களை வேட்டையாடிய `சீகல்ஸ்' பறவைகள்! - Photo Clicks

மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைகள்...மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைகள்...மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைகள்...மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைகள்...மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைக... மேலும் பார்க்க

`தவிக்க விட்டுட்டுப் போயிட்டியே'- உடல்நலக் குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை; கதறிய பாகன்!

நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் யானை காந்திமதி முன் செல்வது வழக்கம். நெல்லையப்பர் கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள தனி அறையில் காந்திமதி யானையை கோயில் நிர்வாகம் பராமரித்து வ... மேலும் பார்க்க