செய்திகள் :

Wayanad : இறந்த புலியின் வயிற்றில் பெண்ணின் தலைமுடி, கம்மல்! - வனத்துறை சொல்வதென்ன?

post image

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மானந்தவாடி பகுதியைச் சேர்ந்த ராதா என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு புலி தாக்கிக் கொன்றது. அவரின் உடல் பாகங்களையும் அந்த புலி தின்றுள்ளது. அடுத்தடுத்து மனிதர்களை தாக்கி உண்ணும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். உடனடியாக அந்த புலியை பிடிக்க வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தினர்.

உயிரிழந்த ராதா

குறிப்பிட்ட அந்த புலியை உயிருடனோ அல்லது சுட்டுக் கொன்றோ பிடிக்க கேரள அரசு அனுமதி வழங்கியிருந்தது. மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கும் முயற்சியில் நேற்று ஈடுபட்டபோது வனத்துறை பணியாளர் ஒருவர் மீது பாய்ந்து தாக்கியது. அப்போது வனத்துறையினர் புலி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ஆனால், அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறது. சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்‌‌ வனத்துறை பணியாளர்.

அடுத்த அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே புலியைப் பிடிக்கும் முயற்சியில் இன்று காலை வனத்துறையினர் களமிறங்கியுள்ளனர். ஆனால், பிலாக்காவு பகுதியில் அந்த புலி இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறாய்வும் செய்துள்ளனர். புலியின் கழுத்து பகுதியில் சில காயங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். புலியின் வயிற்றுக்குள் பெண்ணின் தலைமுடி, கம்மல், மேலாடை பட்டன் போன்றவை இருப்பதையும் கண்டுள்ளனர்.

உயிரிழந்த புலி‌

இது குறித்து தெரிவித்துள்ள வயநாடு வனத்துறையினர், "சுமார் 7 வயது மதிக்கத்தக்க இந்த பெண் புலியின் கழுத்து பகுதியில் 4 இடங்களில் கடுமையான காயங்கள் இருப்பதைக் கண்டோம். காட்டில் வேட்டையாடும் திறனை இழந்த காரணத்தாலேயே பெண்ணை தாக்கிக் கொன்று தின்றிருக்கலாம். புலியின் வயிற்றுக்குள் பெண்ணின் தலைமுடி, கம்மல், மேலாடை பட்டன் போன்றவை இருந்தன. உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்" என்றனர்.

ஆமை: தனிமை விரும்பிகள், மனிதனுக்கு மூத்தவை -ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!

ஆமைகள் மிகவும் வயதான தோற்றத்தைக் கொண்டிருக்கும். எதாவது ஆபத்து வந்தால் தனது ஓட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்ளும்.மிகவும் மெதுவாக இயங்கும். பெரும்பாலும் கிழங்கு, தண்டு, இலைகளை உண்ணும். வெகு சில கடலாமைகள்... மேலும் பார்க்க

கோவை: ரேஷன்அ​ரி​சியைத் தேடி வீட்டுக்குள் நுழைந்த யானை - பதறிய வட மாநில தொழிலாளர்கள்..!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்புப் பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வேலுமணி என்... மேலும் பார்க்க

``யானை – மனித மோதலை தவிர்க்க ஏ.ஐ கேமரா தொழில்நுட்பம்'' -களமிறங்கிய மலை கிராமம்

கோவை மாவட்டம் முழுவதுமே யானை – மனித மோதல் பிரச்னை அதிகரித்து வருகிறது. அதிலும் மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் யானை மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக... மேலும் பார்க்க

மரக்காணம்: உப்பளத்தில் முகாம்; மீன்களை வேட்டையாடிய `சீகல்ஸ்' பறவைகள்! - Photo Clicks

மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைகள்...மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைகள்...மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைகள்...மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைகள்...மீன்களை வேட்டையாடும் "சீகல்ஸ்" பறவைக... மேலும் பார்க்க

`தவிக்க விட்டுட்டுப் போயிட்டியே'- உடல்நலக் குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை; கதறிய பாகன்!

நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் யானை காந்திமதி முன் செல்வது வழக்கம். நெல்லையப்பர் கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள தனி அறையில் காந்திமதி யானையை கோயில் நிர்வாகம் பராமரித்து வ... மேலும் பார்க்க