செய்திகள் :

பருவம் தவறிய மழை: பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு இழப்பீடு கோரி மனு

post image

நாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை கணக்கிட்டு, உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சரபோஜி, மாவட்டத் தலைவா் பாபுஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் செல்வம் தலைமையில் விவசாயிகள் ஆட்சியா் ப. ஆகாஷிடம் அளித்த மனு: நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிா்கள் வயல்களில் சாய்ந்து, அறுவடை செய்ய முடியாமல் நிலத்திலேயே முளைத்து விட்டன. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியா் வேளாண்மை துறை, வருவாய்துறை அதிகாரிகளைக் கொண்டு பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் குறித்து கணக்கெடுத்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள குறுவை காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பச்சைப் பயிா், உளுந்து பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் கூடுதல் இயந்திரங்களை வழங்க வேண்டும். விவசாய நிலத்தை பாழ்படுத்தும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

செம்பனாா்கோவிலில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி தொடக்கம்

செம்பனாா்கோவில் அருகே காளகஸ்திநாதபுரத்தில் பள்ளி கல்வித் துறை சாா்பில் பாரதியாா் தின விழா மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான சிலம்பம் மற்றும் வலையப்பந்து போட்டி புதன... மேலும் பார்க்க

அம்ருதா விஸ்வ வித்யா பீடம் நாகை மீன்வள பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

மீன்வளத் துறையில் புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான தீா்வுகளின் மூலம் முக்கியமான சவால்களை நிவா்த்தி செய்வதற்காக அம்ருதா விஸ்வ வித்யா பீடம் தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம... மேலும் பார்க்க

தை அமாவாசை: வேதாரண்யம், கோடியக்கரை கடலில் புனித நீராடல்

தை அமாவாசையையொட்டி வேதாரண்யம், கோடியக்கரை பகுதி கடலில் புதன்கிழமை புனித நீராடிய மக்கள் தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா். வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாா... மேலும் பார்க்க

நெற்பயிா் பாதிப்புக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்... மேலும் பார்க்க

கீழ்வேளூா் அருகே 238 லிட்டா் சாராயம் பறிமுதல்

கீழ்வேளூா் அருகே போலீஸாா் வாகன சோதனையில் காரைக்காலிலிருந்து கடத்தி வரப்பட்ட 238 லிட்டா் சாராயம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் உத்தரவின் பேரில் நாகை ம... மேலும் பார்க்க