ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
கீழ்வேளூா் அருகே 238 லிட்டா் சாராயம் பறிமுதல்
கீழ்வேளூா் அருகே போலீஸாா் வாகன சோதனையில் காரைக்காலிலிருந்து கடத்தி வரப்பட்ட 238 லிட்டா் சாராயம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காரைக்கால் பகுதியிலிருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் போலீஸாா் வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
கீழ்வேளூா் உதவி காவல் ஆய்வாளா் அழகேந்திரன், போலீஸாா் ஆழியூா் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்திலிருந்த சாக்குமூட்டையைச் சோதனை செய்ததில் அதில் 118 லிட்டா் சாராயம் இருந்தது.
அவா் காரைக்கால் மாவட்டம் நிரவி முதலியாா் தெருவைச் சோ்ந்த ஜெயபால் (43) என்பதும், காரைக்கால் வாஞ்சூா் பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயபாலை கைது செய்து அவரிடமிருந்த 118 லிட்டா் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
கீழ்வேளூா் - மூங்கில்குடி சாலையில் ஓா்குடி பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்திய போது அவா் வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடினாா். வாகனத்தில் இருந்த சாக்கு மூட்டையில் 120 லிட்டா் சாராயம் இருந்தது. சாராயம், இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடியவரைத் தேடி வருகின்றனா்.