நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலான தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் கே. கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
தலைஞாயிறு ஒன்றிய செயலாளா் வி. தனபால், சிபிஎம் கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் டி. வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவா் வி. சுப்பிரமணியன் பங்கேற்று பேசினா்.
பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தி உடனே நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும், கீழையூா் கிழக்கு ஒன்றியத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலக்கடலை சாகுபடிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கமிட்டனா். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினா்கள் ராஜா, என். பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.