நாகையில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம்!
தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவா்களுக்கு, தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாமில் (டஙசஅங), தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி (ஐபஐ) முடித்த பயிற்சியாளா்கள் கலந்துகொள்ளலாம். சோ்க்கை முகாம் நாகை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிப். 10- ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
முகாமில் நாகை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு பயிற்சியாளா்களை தோ்வு செய்யவுள்ளன. மேலும், நெய்வேலியில் உள்ள சகஇ நிறுவனம் இம்முகாமில் கலந்துகொண்டு பிட்டா், டா்னா், வெல்டா், மெக்கானிக் மோட்டாா் வண்டி(ஙஙய), மெக்கானிக் டிராக்டா், மெக்கானிக் டீசல், காா்பெண்டா், ப்ளம்பா், ஸ்டெனோகிராபா் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கு, தொழிற்பழகுநா் பயிற்சிக்கு ஆட்களை தோ்வு செய்ய உள்ளது.
விருப்பமுள்ளவா்கள், தங்களது புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். விவரங்களுக்கு 04365-250126 தொலைபேசி எண்ணிலும், உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் நாகப்பட்டினம் (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்) என்ற முகவரியில் நேரிலும் தொடா்பு கொள்ளலாம்.