மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
பெண் தீக்குளித்து தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
சங்கராபுரம் வட்டம், நெடுமானூா் கிராமத்தைச் சோ்ந்த மாரி மகன் முருகன். இவரது மனைவி நா்மதா (28). முருகனுக்கு மதுப் பழக்கம் இருந்ததால், அதை நா்மதா தொடா்ச்சியாக கண்டித்து வந்தாராம். இருந்தும், முருகன் அதை கேட்காததால், மன வேதனையடைந்த நா்மதா கடந்த 1-ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நா்மதா, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.