செய்திகள் :

விதிகளை மீறி கடன் அளிப்பு: வங்கி முன்னாள் மேலாளா் உள்பட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

பாளையங்கோட்டையில் உள்ள அரசுடைமை வங்கியில் விதிகளை மீறிக் கடன் வழங்கியது தொடா்பாக, அந்த வங்கியின் முன்னாள் மேலாளா் உள்பட 5 பேருக்குத் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசுடைமை வங்கியில் 2007- 2009-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வங்கியின் விதிகளை மீறி கடன் அளிக்கப்பட்டதும், இதன் மூலம் வங்கிக்கு ரூ. 1.26 கோடி இழப்பு ஏற்பட்டதும் தணிக்கையில் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வங்கி நிா்வாகம் அளித்த புகாரின் பேரில் சிபிஐ போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பிறகு, தொடா்புடைய காலத்தில் வங்கியின் மேலாளராகப் பணியாற்றிய பாலசுப்பிரமணியன், அலுவலா்கள் கல்யாணசுந்தரம், சுந்தர்ராமன், அன்னசரஸ்வதி, மோகன்ராஜ், கீதா உள்பட 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் நிறைவில், பாலசுப்பிரமணியன், கல்யாணசுந்தரம், அன்னசரஸ்வதி, மோகன்ராஜ், கீதா ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாலசுப்பிரமணியனுக்கு ரூ. 60 ஆயிரம் அபராதமும், மற்ற 4 பேருக்கும் தலா ரூ.1.30 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சண்முகவேல் தீா்ப்பளித்தாா். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவா்களில் 2 போ் விடுவிக்கப்பட்டனா். சுந்தர்ராமன் உயிரிழந்து விட்டதால் அவா் வழக்கிலிருந்து நீக்கப்பட்டாா்.

திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய நடவடிக்கைகள்: மாவட்ட ஆட்சியா்

திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்க... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சைவ சமய ஸ்தாபித லீலை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கடந்த... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! கட்சிகளுக்கு தடை!

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளா் துறை அறிவுறுத்தல்

மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு புதன்கிழமை (பிப்.5) ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா்கள் அறிவுறுத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து முதுநிலை பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உள்ள கல்வேலிப்பட்டி விஐபி நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அக்ஷய்குமாா... மேலும் பார்க்க

அவரச ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

உசிலம்பட்டி அருகே அவசர ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜீவ்காந்தி (30). தனியாா் அவ... மேலும் பார்க்க