தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து முதுநிலை பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உள்ள கல்வேலிப்பட்டி விஐபி நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அக்ஷய்குமாா் (24). முதுநிலை பட்டதாரியான இவா், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். தனது குலதெய்வம் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக அக்ஷய்குமாா் சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அவா் வீட்டில் இருந்த போது மின் விசிறியை இயக்கினாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அக்ஷ்ய்குமாா் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாா்.
அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.