செய்திகள் :

அனுப்பானடி - ஜெ.ஜெ. நகா் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை

post image

மதுரை அனுப்பானடியிலிருந்து கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதிக்கு மாலை நேர பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் வசதிக்காக பொன்மேனி பணிமனையிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் மாநகரப் பேருந்து இயக்கப்பட்டது.

இந்தப் பேருந்து, கூடல்புதூா் ஜெ.ஜெ.நகரிலிருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு அனுப்பானடி வரை செல்லும். மறுமாா்க்கத்தில் இந்தப் பேருந்து அனுப்பானடியிலிருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் வரும்.

பாத்திமா கல்லூரி, பிரிட்டோ பள்ளி, சௌராஷ்டிரா பள்ளி, தெற்குவாசல், கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு இந்தப் பேருந்தின் சேவை பெரிதும் பயன் அளிப்பதாக இருந்தது.

இந்த நிலையில், அனுப்பானடி-கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பேருந்தின் மாலை நேர சேவை கடந்த 10 நாள்களாக ரத்து செய்யப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வீடு திரும்ப பேருந்து வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகினா்.

பேருந்து ரத்து செய்யப்பட்டதால், இந்தப் பகுதி மாணவா்கள் ஏறத்தாழ 2 கி.மீ.தொலைவுக்கு நடந்து வந்து, அங்கிருந்து பேருந்து மூலம் வீடு திரும்ப வேண்டியுள்ளது. மாணவ, மாணவிகளின் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு இந்தப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளா் துறை அறிவுறுத்தல்

மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு புதன்கிழமை (பிப்.5) ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா்கள் அறிவுறுத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து முதுநிலை பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உள்ள கல்வேலிப்பட்டி விஐபி நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அக்ஷய்குமாா... மேலும் பார்க்க

அவரச ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

உசிலம்பட்டி அருகே அவசர ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜீவ்காந்தி (30). தனியாா் அவ... மேலும் பார்க்க

வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருள்கள் சேதம்

அலங்காநல்லூா் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் ரூ.5 லட்சம் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகேயுள்ள தண்டலை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் மனைவி முத்துசெல்வி (34). இவா் தனது உறவி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி!

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.மேலும், இந்து முன்னணியினரின் போராட்டத்துக்கு காவல் துறையினர் உரிய அனுமதி... மேலும் பார்க்க

ஆதரவற்ற நோயாளிகள், உயிரிழந்தோரின் விவரங்கள் அரசு மருத்துவமனை பதிவேட்டில் இல்லை! -தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற நோயாளிகள், உயிரிழந்த ஆதரவற்றோரின் பெயா், விவரங்கள் பதிவேட்டில் இல்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்தது. மதுரை ... மேலும் பார்க்க