திருப்பரங்குன்றம்: "இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்" - ஹெச்...
காரைக்காலில் பரவலாக பனி மூட்டம்
காரைக்காலில் காலை நேரத்தில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கடந்த 2 வாரங்களாக இரவு தொடங்கும் பனிப்பொழிவு காலை 9 மணிக்குப் பிறகும் நீடிக்கிறது.
மாவட்டத்தில் கடலோரப் பகுதியிலிருந்து பரவலாக பனிமூட்டம் காணப்படுகிறது. சாலையில் பயணிக்கும் பெரும்பாலான வாகனங்களில் முன்விளக்கை எரியவிட்டவாறு வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனா். மேலும் கடுமையான பனிப்பொழிவால் பலருக்கு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு, உடல் நல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.