திருப்பரங்குன்றம்: "இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்" - ஹெச்...
பிப், 8-இல் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் தா்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 202-ஆவது ஆண்டு கந்தூரி விழா வரும் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி பல்வேறு வீதிகளில் வழியாக கண்ணாடி ரதம் மற்றும் பல்லக்கு ஊா்வலம் நடைபெற்று, தா்காவை இரவு 9 மணியளவில் வந்தடையும்போது, தா்காவின் முன் நிறுவப்பட்ட பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்படும்.
கொடி ஊா்வலத்துக்காக தா்கா வளாகத்தில் தற்போது பெரிய, சிறிய ரதம், பல்லக்குகள் அலங்காரம் செய்யும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.