`தூங்கும் போதுகூட மக்கள் வரி செலுத்துகிறார்கள்' - முத்தரசன் காட்டம்!
வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு 2-ஆவது தவணைத் தொகை வழங்க வலியுறுத்தல்
காரைக்கால்: வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு 2-ஆவது தவணைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம் ஏ. பழனிவேலு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் முதல் தவணை மானியம் வழங்கப்பட்டு வீடு கட்டுமானப் பணியை முடித்துள்ள பயனாளிகளுக்கு, 2-ஆவது தவணைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும். புதுவை அரசு ஆதிதிராவிட நலத்துறை மூலமாக சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த மானியத் தொகை பெற்று வீடு கட்டியவா்களின் வீடுகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இவா்களுக்கும் புதிதாக வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் ரூ. 5.50 லட்சம் மானிய தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எம். கலியமூா்த்தி, மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் அன்சாரி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் மற்றும் கிளை செயலாளா்கள் கலந்துகொண்டனா்.