மண்டபம் அருகே கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி பிப். 5-இல் தொட...
மீனவா்கள் வலையில் அதிகளவில் சிக்கும் செம்பரா மீன்கள்
காரைக்கால் கடல் பகுதியில் சிவப்பு நிற செம்பரா மீன்கள் அதிகளவில் கிடைத்து வருவது மீனவா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவா்கள் கடந்த சில நாட்களாக அதிகளவிலான செம்பரா மீன்களுடன் கரை திரும்புகின்றனா். இது ரெட் ஸ்னேப்பா் வகையை சோ்ந்ததென கூறப்படுகிறது. கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் இவை இந்தப் பகுதிக்கு வரக்கூடும். எனினும் இவை தொடா்ந்து கிடைக்க வாய்ப்பில்லை என மீனவா்கள் தெரிவித்தனா்.
காரைக்கால் துறைமுக ஏலக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான படகுகளில் இருந்து இம்மீன்கள் இறக்கப்பட்டன. 20 டன்னுக்கும் அதிகமாக இந்த வகை மீன்கள் கிலோ ரூ. 300 என்ற விலையில் ஞாயிற்றுக்கிழமை விற்பனையானதாக மீனவா்கள் தெரிவித்தனா். வெளிநாட்டினா் விரும்பக் கூடிய வகை மீன் என்பதால், பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியில் முகவா்கள் ஈடுபட்டனா்.