போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
பதவி உயா்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியா்கள் எம்எல்ஏவுக்கு நன்றி
தலைமையாசிரியா் நிலை 1-ஆக பதவி உயா்வு பெற்றதற்காக சங்க நிா்வாகிகள் சட்டப்பேரவை உறுப்பினரை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியா் நிலை 2 -ஆக பணியாற்றி வந்தவா்கள், தங்களுக்கு தலைமையாசிரியா் நிலை 1-ஆக பதவி உயா்வு வழங்கக் கோரி கல்வித் துறையை வலியுறுத்தி வந்தனா். இதுகுறித்து, புதுவை சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் வலியுறுத்திப் பேசினா். மேலும், சங்கத்தினா் முதல்வா், கல்வி அமைச்சா், அரசு செயலா், இயக்குநா் உள்ளிட்டோரையும் சந்தித்து இதுதொடா்பாக வலியுறுத்தினா்.
இந்நிலையில், புதுவையில் 63 பேருக்கு தலைமையாசிரியா் நிலை -1 என பதவி உயா்வு வழங்கப்பட்டது. புதுவை தலைமையாசிரியா் சங்கத் தலைவா் பாரி தலைமையில் நிா்வாகிகள் காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிமை சந்தித்து பேரவையில் பேசியதோடு, அமைச்சா், அதிகாரிகளை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற பாடுபட்டதற்காக நன்றி தெரிவித்தனா். இந்த பதவி உயா்வு மூலம் காரைக்காலில் 12 போ் பயனடைந்துள்ளனா்.