உபி: உயிரைக் குடித்த ரூ.100 பந்தயம்; குடிபோதையில் குளத்தை நீந்திக் கடக்க முயன்றவ...
``அமெரிக்காவை யார் தாக்க நினைத்தாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து கொல்வோம்..'' - ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை அமல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் சோமாலியாவில் குகைகளில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழுவினர் மீது வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி அமெரிக்கா சோமாலியாவில் வான்வழி தாக்குதலை துவங்கி இருக்கிறது. `அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம்' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், "குகைகளில் பதுங்கியிருந்த கொலையாளிகள் அமெரிக்காவையும், நமது நட்பு நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றனர். அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருக்கிறேன். எந்த வகையிலும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல், பல பயங்கரவாதிகள் மற்றும் குகைகளை அழித்துள்ளோம்.
எங்கள் இராணுவம் பல ஆண்டுகளாக இந்த ISIS தாக்குதல் திட்டமிடுபவரை குறி வைத்து வருகிறது, ஆனால் பைடனும் அவரது கூட்டாளிகளும் இந்த வேலையை அவர்களைச் செய்யவிடவில்லை. தற்போது நான் அதற்கு அனுமதித்து இருக்கிறேன். அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம்" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.