செய்திகள் :

US Dollar: ``டாலரை மாற்ற நினைத்தால்..'' -இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் சொல்வதென்ன?

post image

ட்ரம்ப் என்ற வார்த்தையே இனி 'அதிரடி' என மாறிவிடும் போலும். அடுத்த அதிரடியை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக தற்போது இறக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

அவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், "பிரிக்ஸ் கட்டமைப்பில் இருக்கும் நாடுகள் அமெரிக்க டாலர்களை சர்வதேச சந்தையில் நாணயமாக பயன்படுத்துவதை மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள். அதை நாம் பொறுத்திருந்து வேடிக்கை பார்க்கும் காலம் முடிந்துவிட்டது. இந்த மாதிரி நட்பு பாராட்டாத பிரிக்ஸ் நாடுகளிடம் இருந்து, நாங்கள் பிரிக்ஸ் என்னும் புதிய நாணயத்தை உருவாக்கவும் மாட்டோம், டாலரை மாற்றி வேற எந்த நாணயங்களையும் ஆதரிக்கமாட்டோம் என்ற உறுதிப்பாட்டை பெறப்போகிறோம்.

அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், அவர்கள் 100 சதவிகித வரி விதிப்பை சந்திப்பார்கள். கூடுதலாக, அவர்கள் அமெரிக்கா பொருளாதாரத்திற்கு அவர்களுடைய பொருட்கள் மற்றும் சேவையை விற்க முடியாது. அதற்கு பதில் வேறு எதாவது நாட்டை தான் அவர்கள் தேட வேண்டும். ஆக, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரை பிரிக்ஸ் நாடுகள் மாற்றுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. அப்படி எதாவது நாடு முயன்றால் அவர்கள் மீது வரிகள் விதிக்கப்படும் மற்றும் அமெரிக்காவில் வணிகத்தை மேற்கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. தற்போது உலக அளவில் நடந்தவரும் பல்வேறு சம்பவங்களால், டாலருக்கு பதிலாக வேறு எதாவது நாட்டின் நாணயத்தை வணிகத்தில் பயன்படுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துவந்த நிலையில், தற்போது ட்ரம்ப் போட்டுள்ள பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.

Doctor Vikatan: அரிசி தின்னும் பழக்கம்... உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: நம்மில் பலருக்கும் அரிசியை பச்சையாக சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு. தினமும் சிறிது அரிசியைபச்சையாகச் சாப்பிடுவேன். சமீபத்தில் 12 வயது சிறுமி ஊற வைத்த அரிச... மேலும் பார்க்க

``காந்தி திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டார்'' -ஆளுநர் ஆர்.என்.ரவி

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்... மேலும் பார்க்க

இந்தியாவில் பஞ்சத்தை போக்க அரும்பாடுபட்டவர்... பசுமைப் புரட்சி பகலவன் சி.சுப்பிரமணியம்

இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர், உணவு மற்றும் விவசாய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அன்றைய காலகட்டத்தில் நிலவிய பஞ்சத்தையும் பசியையும் நீக்க, பசுமைப் புரட்சியை முனைப்புடன்... மேலும் பார்க்க

Doctor Vikatan: AC அறையில் சிலருக்கு அதிகம் குளிர்கிறது; சிலருக்கு வியர்க்கிறது... ஏன்?

Doctor Vikatan:சிலருக்கு ஏசியில் பயங்கரமாகக் குளிர்கிறது என்கிறார்கள். அதே இடத்தில் சிலரோ எனக்கு வியர்க்கிறது என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? அவர்கள் பொய் சொல்கிறார்களா அல்லது தோலின் தன்மையைப் ... மேலும் பார்க்க

Grapes: செல்களின் வீக்கத்தைத் தடுக்கும்; புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திராட்சை!

''உலகின் எல்லா நாகரிக வரலாற்றிலும் இடம்பெற்ற பழம், திராட்சை. எந்தப் பருவத்திலும் கிடைக்கக்கூடிய பழம். வைட்டமின், தாது உப்புக்கள், ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. கறுப்பு, பச்சை என இரண்டு வகைகள் இருந்தாலும்... மேலும் பார்க்க