வேங்கைவயல்: "மலம் கலந்த நீரை யாரும் பருகவில்லை" - நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக...
BCCI Awards: வாழ்நாள் சாதனையாளர் சச்சின், ஸ்பெஷல் அவார்ட் அஸ்வின்... யார், யாருக்கு பிசிசிஐ விருது?
கிரிக்கெட் சிறந்து விளங்கும் மற்றும் சாதனை புரிந்த இந்திய வீரர்களுக்கு இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2023-24ம் ஆண்டுக்கான BCCI விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று (பிப்ரவரி 1) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஐ.சி.சி சேர்மன் ஜெய் ஷா, BCCI தலைவர் ரோஜர் பின்னி உட்பட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், இந்திய கிரிக்கெட்டின் முதல் டெஸ்ட் கேப்டன் சி.கே. நாயுடுவின் பெயரில் வழங்கப்படும், சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது சச்சினுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது 51 வயதாகும் சச்சின் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் கரியரில், மொத்தமாக 664 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதேபோல, சதங்களில் சதமடித்து 34,357 ரங்களைக் குவித்திருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் இந்திய வீரர் போலி உம்ரிகர் பெயரில் வழங்கப்படும் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது ஆண்கள் பிரிவில் ஜஸ்பிரித் பும்ராவுக்கும், மகளிர் பிரிவில் ஸ்மிருதி மந்தனாவுக்கும் வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த அறிமுக வீரர் விருது சர்பராஸ் கானுக்கும், சிறந்த அறிமுக வீராங்கனை விருது ஆஷா ஷோபனாவுக்கு வழங்கப்பட்டது.
மகளிர் பிரிவில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் விருது ஸ்மிருதி மந்தனாவுக்கும், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் விருது தீப்தி ஷர்மாவுக்கும் வழங்கப்பட்டது. மேலும், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டருக்கு வழங்கப்படும் லாலா அமர்நாத் விருது ஷஷாங் சிங் (லிமிடெட் ஓவர்ஸ்), தனுஷ் கோட்டியன் (ரஞ்சி டிராபி) ஆகியோருக்கும், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்ட அணிக்கான விருது மும்பை அணிக்கும் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவை தவிர, உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு மேலும் பல விருதுகளும் வழங்கப்பட்டன
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs