திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ மரணம்
மாரடைப்பால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமது மரணமடைந்தார்.
கலிகஞ்ச் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமதுவுக்கு சனிக்கிழமை இரவு 11:50 மணியளவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பலாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு அவர் மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மரணமடைந்தார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அகமதுவின் மறைவு குறித்து முதல்வர் மமதா பானர்ஜி வெளியிட்ட பதிவிட்ட பதிவில், நசிருதீன் அகமதுவின் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது.
மேலும் 2 ராம்சார் பகுதிகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மறைந்த அகமது அப்பகுதியில் பிரபலமாக 'லால் டா' என்று அழைக்கப்பட்டார்.
வழக்கறிஞரான அகமது, 2011ஆம் ஆண்டு முதல்முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் 2021ஆம் ஆண்டு கலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.