செய்திகள் :

நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்: தமிமுன் அன்சாரி

post image

மத்திய அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

இது பற்றி மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு மாநிலத்தின் வரி வருவாய்க்கு ஏற்ப நீதியான முறையில் வரி பங்கீடு நடத்தப்படவில்லை என்பதை இந்த நிதி நிலை அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.

இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அப்பட்டமாக ஓரங்கட்டிருப்பதை எளிதில் உணர முடிகிறது. தமிழ்நாட்டில் ஓடும் ரயில்கள்தான் இந்தியாவிலேயே அதிக லாபத்தை ஈட்டுகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது கண்டிக்கத்தக்கது. இந்த நிதிநிலை அறிக்கையில் பிகார் மக்கள் மீது காட்டக்கூடிய கருணையை குறை கூறவில்லை.

ஆனால் தமிழ்நாட்டு மக்களின் மீது ஏன் இந்த பாராபட்சம் என்ற கேள்வி எழுகிறது. பிகாருக்கு ஆப்பிளை தட்டில் வைத்து கொடுத்ததை குறை கூறவில்லை.

ஆனால் தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு நெல்லிக்கனி அளவாவது திட்டங்களைத் தந்திருக்கலாம்.

மத்திய அரசுக்கு ஆதரவாக வாதாடுபவர்கள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதையும் படிக்க: கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடக்கம்!

இந்தியாவில் 35 கோடி மக்களுக்கு அடிப்படை மருத்துவ - சுகாதார வசதிகள் கிடைக்காத நிலையில், அதற்கு ரூ. 98 ஆயிரத்து 311 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

நாட்டின் முதல்நிலை உற்பத்தி களமாக இருக்கும் விவசாயத் துறைக்கு 1 லட்சத்து 71 ஆயிரத்து 457 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது சரியான அணுகுமுறை இல்லை.

காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 விழுக்காடு என உயர்த்தி இருப்பது எல்ஐசி போன்ற நிறுவனங்களின் தனித்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில்; பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு சாமானிய மக்களிடம் பணப்புழக்கமும் குறைந்து வரும் நிலையில்; இந்த பட்ஜெட் ஒரு சார்பானதாகவும், திருப்தியற்ற வகையிலும் இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்பாரா இபிஎஸ்?: அமைச்சர் ரகுபதி கேள்வி

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதிமுக பின்புலம் உள்ளவன் என்பதை சுட்டிக்காட்டி, வீராவேசமாக அறிக்கைவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.... மேலும் பார்க்க

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடக்கம்!

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.கோவை மாநகரில் ரூ.10,740 கோடி மதிப்பீட்டில் 34.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப் பணிகளுக்கான விர... மேலும் பார்க்க

மேலும் 2 ராம்சார் பகுதிகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

உலக ஈரநிலங்கள் நாளை முன்னிட்டு, மேலும் 2 ராம்சார் பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்இது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:”உலக ஈரநிலங்கள் நாளான இன்... மேலும் பார்க்க

கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி!

குறிப்பிட்ட சில அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு கனடா பதிலட... மேலும் பார்க்க

தவெக ஆண்டு விழா: கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்த விஜய்!

தமிழக வெற்றிக்கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கொள்கைத் தலைவர்களின் சிலைகளை விஜய் திறந்து வைத்தார். மேலும் பார்க்க

திமுகவை எதிர்க்கும் துணிவின்றி மறைமுக யுத்தம்: முதல்வர்

திமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு ... மேலும் பார்க்க