'சித்தா' பட இயக்குநர் அருண்குமார் திருமணம்; நேரில் சென்று வாழ்த்திய விஜய் சேதுபதி, விக்ரம்!
கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‛பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் S.U. அருண்குமார்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‛சேதுபதி' படத்தை இயக்கினார். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 3வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த அவர், ‛சிந்துபாத்' படத்தை இயக்கி, 2019ல் வெளியிட்டிருந்தார். அதன் பிறகு கடந்த 2023-ல் சித்தார்த்தை வைத்து 'சித்தா' படத்தை இயக்கி இருந்தார்.
இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. தற்போது விக்ரமை வைத்து ‛வீர தீர சூரன்' திரைப்படத்தை அருண்குமார் இயக்கி இருக்கிறார்.
இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (பிப்.2) இயக்குநர் அருண்குமாரின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன் எனப் பலர் கலந்துகொண்டு அருண்குமாரை வாழ்த்தி இருக்கின்றனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...