செய்திகள் :

Ajith: ``அஜித் சாருக்கு பாராட்டு விழா நடத்தணும்...'' - விருப்பம் தெரிவித்த யோகி பாபு

post image
அஜித்துக்கு தனி பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார் யோகி பாபு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' என இரண்டு படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இதனிடையே சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பாராட்டி சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர்.

Ajith Kumar Racing
Ajith Kumar Racing

இதனைத்தொடர்ந்து அஜித்துக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது. அஜித் ரசிகர்கள் தொடங்கி, அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அஜித் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் யோகிபாபுவிடம் அஜித் பத்ம பூஷன் வென்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எவ்வளவு பெரிய சாதனைப் படைத்திருக்கிறார். மிகவும் பெரிய விஷயம் அது. அவரை நம் எல்லோரும் பாராட்டணும்.

Yogi Babu
Yogi Babu

அவருக்கு தனி பாராட்டு விழாவே நடத்தணும். அந்த விழாவில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். அப்போது அஜித் சார் குறித்து நான் நிறைய பேசுகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Sk: "அப்பா, இன்னைக்கு நான் படிச்ச பள்ளியிலேயே சீஃப் கெஸ்ட்..." - சிவகார்த்திகேயன் உருக்கம்

சுதாகொங்கராவின் 'பராசக்தி' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் படித்த திருச்சி தனியார் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருக்கிறார். அப்போது த... மேலும் பார்க்க

Idly Kadai: தனுஷுடன் அருண் விஜய் - பரபர தனுஷ் பட அப்டேட்ஸ்!

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வருகிற `இட்லி கடை' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது.அதே நாளில் அஜித் நடித்துள்ள `குட் பேட் அக்லி' திரைப்படமும் வெளியாகவிருக்கிறது. நடிப்பை தாண்டி இயக்கத்தில் தனுஷ் பர... மேலும் பார்க்க

’கதைகூட கேட்காம விஜயகாந்த் சாரை கமிட் செய்து கொடுத்தார் வி.நடராஜன் சார்' - உருகும் ஆர்.வி.உதயகுமார்

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'முள்ளும் மலரும்', பிரபு நடிப்பில் 'கலியுகம்', 'உத்தம புருஷன்', 'தர்மசீலன்', 'ராஜா கைய வச்சா', 'தர்மசீலன்', ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 'சின்ன கவ... மேலும் பார்க்க

இயக்குநர் மகேந்திரனை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் வி.நடராஜன் காலமானார்; திரையுலகினர் இரங்கல்

உடல்நலக் குறைவால் தயாரிப்பாளர் `ஆனந்தி ஃபிலிம்ஸ்' நடராஜன் காலமானார்.ரஜினி - மகேந்திரன் கூட்டணியில் உருவான `முள்ளும் மலரும்', பிரபுவின் `உத்தம புருஷன்', `ராஜா கைய வச்சா', `தர்ம சீலன்', சத்யராஜ் நடித்த ... மேலும் பார்க்க