வேங்கைவயல்: "மலம் கலந்த நீரை யாரும் பருகவில்லை" - நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக...
TVK: "தவெக 2ஆம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்க முடியவில்லை; காரணம்..." - ஆதவ் அர்ஜுனா
த.வெ.க-வின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை என த.வெ.க தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் தெரிவித்திருக்கிறார்.
வி.சி.க-வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா நேற்று முன்தினம் (ஜனவரி 31) பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவிற்கு த.வெ.க தலைவர் விஜய், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.
இந்நிலையில் இன்று நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இதை முன்னிட்டு இன்று பனையூரில் த.வெ.க-வின் 2 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற இருக்கிறது.
இதில் தன்னால் கலந்துகொள்ள முடியாது என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருக்கிறார். அதாவது உத்தரகாண்டில் நடக்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணியின் ஒருங்கிணைப்பாளராகப் பங்கேற்றிருப்பதால் த.வெ.க-வின் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவில் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை என த.வெ.க தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs