செய்திகள் :

ஈரோடு: "திமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி உதிரிகளைத் தூண்டிவிடுகிறார்கள்" - முதல்வர் காட்டம்

post image
“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக அமையட்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்.5ஆம் தேதி நடக்கவுள்ளது. அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

ஈரோடு இடைத்தேர்தல்

அந்தக் கடிதத்தில், “கடந்த டிசம்பர் மாதத்தில் நம் அனைவரின் அன்பிற்குரிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர், தந்தை பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அதிர்ச்சி தரத்தக்க மரணத்தால் இந்த இடைத்தேர்தல் களத்தைச் சந்திக்கின்றோம். இந்த முறை ஈரோடு கிழக்கில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் களமிறங்கியுள்ளார். அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் மூன்றரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

உங்களில் ஒருவனான எனது தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தின் நலன் சார்ந்த பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு மிக்க நெசவுத் தொழில், வணிகம் ஆகியவை வளர்ச்சி பெறும் வகையிலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் ஈரோடு கிழக்குத் தொகுதி பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மேலும் சில புதிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்து அவற்றை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளேன். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், இடைத்தேர்தலுக்குப் பிறகு இந்தப் பணிகள் விரைவு பெறும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், சாயக் கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு, குப்பைகளைத் தரம் பிரிக்கும் வசதிகள், புதிய மேம்பாலத் திட்டங்கள், மகளிர் அரசுக் கல்லூரி, வேளாண் கல்லூரி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விசைத்தறிப் பயிற்சி மையங்கள், தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் வேட்பாளர் வாக்கு சேகரிக்கும்போது ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வைத்துள்ளனர். எந்தக் கோரிக்கை வைத்தாலும் அதனை உரிய முறையில் பரிசீலித்து, நிறைவேற்றித் தரக்கூடியதாக திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கைதான், இந்த அரசின் திட்டங்களின் பயனாளிகளான ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் புதிய கோரிக்கைகளை வைப்பதற்குக் காரணம்.

திமுக அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வேட்பாளருக்கு வழங்கும் மகத்தான ஆதரவு. இந்த அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று நாளொரு அவதூறையும் பொழுதொரு பொய்யையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பினாலும் அவை மக்கள் மன்றத்தில் எடுபடுவதில்லை. பொழுது சாய்வதற்குள் எதிர்க்கட்சிகளின் பொய்களும் அவதூறுகளும் பொடிப் பொடியாகிவிடுகின்றன.

திமுக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன. திமுக.வை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்க்கின்றன.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் நலனுக்காகப் பாடுபடுகிற திமுக அரசையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசையும் தமிழ்நாட்டு மக்கள் சரியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள். அதனை ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் மகத்தான வெற்றியின் வாயிலாக நிரூபிப்பார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் மீதும், அங்கே தேர்தல் பணியாற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் தோழமைக் கட்சியின் செயல்வீரர்கள் மீதும் உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், நான் நேரில் வந்து வாக்கு சேகரித்ததாகக் கருதி, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு பிப்ரவரி 5-ஆம் தேதியன்று உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து மகத்தான வெற்றியை அளிக்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நம்மை வழிநடத்தும் தலைவரும், நம் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ‘வெல்வோம் 200 – படைப்போம் வரலாறு’ என்பதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கழகத்தின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

TVK: அறிக்கை அரசியல்; `டார்கெட்' திமுக - தவெகவின் ஓராண்டு பயணம் எப்படியிருந்தது?

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது.பட டைட்டில் விவகாரம், அரசியல் வசனங்கள், விஜய் மீதான் தனிப்பட்ட விமர்சனங்கள் என விஜய்யைச் சுற்றி எப்போதுமே அரசியல் சர்ச்... மேலும் பார்க்க

TVK: "தவெக 2ஆம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்க முடியவில்லை; காரணம்..." - ஆதவ் அர்ஜுனா

த.வெ.க-வின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை என த.வெ.க தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் தெரிவித்திருக்கிறார்.வி.சி.க-வில் இருந்து விலகிய ஆதவ் அர்... மேலும் பார்க்க

Union Budget 2025: "தேர்தல் நடைபெறும் மாநிலங்களை மையப்படுத்திய பட்ஜெட்" - கேரள முதல்வர் காட்டம்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுக... மேலும் பார்க்க

TVK: `போர் யானைகள் பலத்தோடு!'-தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இதை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த கடிதத்தில், " இதயம் மகிழும் ... மேலும் பார்க்க

TVK : 'பட்ஜெட்டுக்காக காத்திருந்த விஜய்; பனையூரில் 'மெட்ராஸ்' பட அரசியல்!' - தவெக மீட்டிங் ஹைலைட்ஸ்!

தவெக-வின் நான்காம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட விஜய் இன்று பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். கோஷ்டி பூசல், மெட்ராஸ் பட பாணியிலான சுவர் அரசியல் என தகதகத்த தவெக முகாமின் இன்றைய மீட்டி... மேலும் பார்க்க

Shock கொடுத்த Vijay, warning கொடுக்கும் EPS! | Elangovan Explains | Vikatan

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,'Budget 2025' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வருமான வரி உச்சவரம்பை 7 லட்சம் டு 12 லட்சம் என உயர்த்தியுள்ளனர். பீகாருக்கு அள்ளிகொடுத்துள்ளனர். இதற்கு பின்னணியில் தேர்தல்... மேலும் பார்க்க