Budget 2025: ``அணுசக்தி மின் உற்பத்தியில் தனியாரை அனுமதிப்பதா..." - பூவுலகின் நண...
"மனைவி பார்த்துக்கொண்டிருப்பார்; அதைச் சொல்ல முடியாது" - மந்தனாவின் கேள்விக்கு ரோஹித்தின் பதிலென்ன?
உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்களுக்கு ஆண்டுதோறும் BCCI சார்பில் விருது வழங்கி வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று (பிப்ரவரி 1) நடைபெற்றது.
இதில், வாழ்நாள் சாதனையாளர் விருது சச்சின் டெண்டுல்கருக்கும், சிறப்பு விருது அஷ்வினுக்கும், சிறந்த சர்வதேச வீரர், வீராங்கனை விருது பும்ராவுக்கும், ஸ்மிருதி மந்தனாவுக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜெய்ஷா, ரோஜர் பின்னி, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், மந்தனாவுக்கும், ரோஹித்துக்கும் இடையே சிறிய உரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, தங்களின் 'எந்த ஹாபியை (Hobby) சக வீரர்கள் கிண்டல் செய்வார்கள்' என ரோஹித்திடம் மந்தனா கேட்டார். அதற்கு, ``என்னுடைய மறதியைப் பற்றிக் கிண்டல் செய்வார்கள். ஆனால், அது என்னுடைய ஹாபி அல்ல. இருப்பினும், ஒருமுறை நான் எனது பர்ஸ் மற்றும் பாஸ்போர்ட்டை மறந்துவிட்டதாய் அவர்கள் கிண்டல் செய்வார்கள். அதுவும் உண்மையில்லை, தசாப்தத்துக்கு முன் நடந்தது அது." என்று ரோஹித்கூறினார்.
இத்தகைய பதில் வந்ததும், ``அப்படியென்றால் நீங்கள் மறந்த மிகப்பெரிய விஷயம் என்ன?" என்று மந்தனா அடுத்த கேள்வியைக் கேட்க, ``என்னால் அதைச் சொல்ல முடியாது. இது நேரலையில் வந்தால் எனது மனைவி பார்த்துக்கொண்டிருப்பார். அதனால் அதைச் சொல்ல முடியாது. எனக்குள்ளே வைத்துக்கொள்கிறேன்." என்று சிரித்தார் ரோஹித் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY