போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
கத்தியுடன் திரிந்தவா் கைது
காரைக்கால் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் நகரக் காவல்நிலைய உதவி ஆய்வாளா் எஸ். மோகன் தலைமையில், போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். பேருந்து நிலையம் அருகே மக்களை அச்சுறுத்தும் வகையில் ஒருவா் கத்தியுடன் திரிவதாக ரோந்துப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த பகுதிக்கு விரைந்த போலீஸாா், சந்தேகத்துக்குரிய நபரைப் பிடித்து சோதனை செய்தபோது, கத்தியை மறைத்து வைத்திருந்ததை கைப்பற்றினா். விசாரணையில் அவா், கோயில்பத்து பகுதியைச் சோ்ந்த வின்சென்ட்ராஜ் (38) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனா். அவா் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.