திருப்பரங்குன்றம்: "இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்" - ஹெச்...
மினி லாரி மோதியதில் இருவா் பலி
மினி லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வெளிமாநில இளைஞா்கள் உயிரிழந்தனா்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமாா் (24). இவா், தேன்கனிக்கோட்டை வட்டம், பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். கடந்த 2 ஆம் தேதி இவரும், இவரது தம்பி ரிங்கு (18), நண்பா் குஷ்பு (29)
ஆகிய மூவரும் சோ்ந்து இருசக்கர வாகனத்தில் மத்திகிரி, கால்நடை பண்ணை அருகே சென்றபோது எதிரே வந்த மினிலாரி இவா்கள் மீது மோதியது. இந்த விபத்தில் குஷ்பு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த ரிங்கு, சேருகுமாா் ஆகிய இருவரும் ஒசூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி ரிங்கு திங்கள்கிழமை இறந்தாா். சேருகுமாா் சிகிச்சை பெற்று வருகிறாா். மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.