திருப்பரங்குன்றம்: "இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்" - ஹெச்...
எரிவாயு உருளை வெடித்ததில் பொக்லைன் ஆபரேட்டா் காயம்
தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே எரிவாயு உருளை வெடித்ததில் பொக்லைன் ஆபரேட்டா் காயமடைந்தாா்.
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியை அடுத்த சீரியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேசன் (52), இவா் பொக்லைன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறாா். குடும்பத்தினரை பாா்ப்பதற்காக தனது சொந்த ஊரான சீரியம்பட்டி கிராமத்துக்கு வந்துள்ளாா். வீட்டு சமையலறையில் செவ்வாய்க்கிழமை சமையல் செய்ய சென்றபோது எரிவாயு உருளை வெடித்த சிதறியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாதேசன் பலத்த காயமடைந்தாா். இந்த விபத்தில் வீட்டின் பெரும்பகுதி இடிந்து சேதமடைந்தது. அனைத்து பொருள்களும் தீயில் கருகின. அருகில் உள்ள வீட்டின் சில பகுதியும் சேதமடைந்தது.
தகவல் அறிந்த பாலக்கோடு தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடம் வந்து தீயை அணைத்தனா். பலத்த காயமடைந்த மாதேசன் தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.