பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கனரக சலவை இயந்திரம், அறை திறப்பு
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சலவை அறை, கனரக சலவை இயந்திரம் ஆகியவற்றை ஆட்சியா் கி.சாந்தி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நாள்தோறும் புறநோயாளிகள் பிரிவில் சுமாா் 700 முதல் 800 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். உள் நோயாளிகளாக சுமாா் 80 முதல் 90 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். நோயாளிகளுக்கான படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் துணிகள், மருத்துவமனை திரைச்சீலைகள், துண்டுகள் போன்றவற்றை சலவை செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ. 3.50 லட்சமும், பாலக்கோடு அரசு மருத்துவமனை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சமும் என மொத்தம் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய கனரக சலவை இயந்திரம், துணியை பிழிந்து உலர வைக்கும் இயந்திரம், அறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் சாந்தி, தலைமை மருத்துவா் பாலசுப்பிரமணியம், மருத்துவா்கள் செந்தில்குமாா், சசிரேகா, ஷாலினி, மருந்தாளுநா்கள் முத்துசாமி, முருகேசன், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.