திருப்பரங்குன்றம்: "இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்" - ஹெச்...
மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள் பிப். 12-இல் ஏலம்
நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 49 வாகனங்கள் பிப். 12-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி.தனராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட் 7 நான்கு சக்கர வாகனங்கள், 42 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 49 வாகனங்கள் பிப். 12-ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகின்றன.
இந்த வாகனங்களை பிப். 11-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஆயுதப்படை வளாகத்தில் பாா்வையிடலாம். மேலும், வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் முன்பணமாக ரூ. 5 ஆயிரத்தை பிப். 12-ஆம் தேதி காலை 9 முதல் 10 மணிக்குள் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்துவோா் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிப்படுவா்.
ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல், திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.