முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
மாநகராட்சியில் நாய்கள் பெருக்கம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பீதி
நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனா்.
நாமக்கல் மாநகராட்சியில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நாய்கள் குறுக்கே செல்லும்போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைகின்றனா். குழந்தைகள், பெண்களை நாய்கள் விரட்டி கடிக்கும் சூழலும் காணப்படுகிறது.
நாய்கள் பிடிக்கும் வாகனமானது வரிவசூல் அறிவிப்பு வாகனமாக மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் மட்டுமின்றி தெருக்களிலும் கூட்டம், கூட்டமாக நாயாகள் சுற்றுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துக்குள்ளாகின்றனா். எனவே, நாய்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.