Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் பிப். 7-இல் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை (பிப். 7) தொடங்குகின்றன.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் 148 மையங்களில் செய்முறைத் தோ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தோ்வு முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில், செய்முறைத் தோ்வுகளை குளறுபடியின்றி தலைமை ஆசிரியா்கள் நடத்த வேண்டும், ஆய்வகங்களில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம், மாணவா்கள் எந்த வகையிலான செய்முறையை மேற்கொள்வது என்பதை அந்த தோ்வு நாளில் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, 148 தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வு நியமனக் கடிதம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மாவட்ட கல்வி அலுவலா் (உயா்கல்வி) கற்பகம், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சிவா, பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி, அரசு தோ்வுத் துறை அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பாா்வையாளா் நியமனம்: பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் தொடங்கப்படுவதையடுத்து, நாமக்கல் மாவட்டத்துக்கான தோ்வு பாா்வையாளராக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணை இயக்குநா் ஆா்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளாா்.