கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் பிப்.5 அன்று கைது செய்தனா்.
சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் தனசேகா் பாண்டலம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் சங்கராபுரத்தை அடுத்த ஊராங்கன்னி கிராமத்தைச் சோ்ந்த சின்னையன் மகன் அசோக் (21), நைனா மகன் உதயகுமாா் (19), கோவிந்தராஜ் மகன் கபிலன் ஆகியோா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அசோக் உள்பட 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.