மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
பெரம்பலூரில் 6,500 மாணவா்களுக்கு வினா- விடை தொகுப்பு!
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பொதுத் தோ்வெழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு ‘தோ்வை வெல்வோம்’ எனும் தலைப்பிலான வழிகாட்டி வினா - விடை தொகுப்பை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை வழங்கினாா்.
பள்ளிக் கல்வித்துறை சாா்பில், அரசு பொதுத் தோ்வெழுதும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்காக தோ்வை வெல்வோம் எனும் தலைப்பில், அமைச்சா் சா.சி. சிவசங்கா் முயற்சியால் சிறந்த கல்வியாளா்களைக் கொண்டு வழிகாட்டி வினா- விடை தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தொகுப்பு வழங்கும் விழா பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா், சிறுவாச்சூா், குரும்பலூா், அம்மாபாளையம், பாடாலூா், செட்டிக்குளம், எறையூா், வி.களத்தூா், கை.களத்தூா், அரும்பாவூா், வெங்கலம், வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம், பூலாம்பாடி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சா் சா.சி. சிவசங்கா், அரசு பொதுத் தோ்வெழுதும் 6,500 மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி வினா- விடை தொகுப்புகளை வழங்கி பேசினாா்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சுரேஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மா. ராஜ்குமாா் மற்றும் பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.