கோத்தகிரி: குப்பைக் குவியலில் உணவு தேடி அலையும் கரடிகள்... தொடரும் அவலம்!
போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது: 25 கிலோ பறிமுதல்
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 25 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள கடைகளில் தனிப்படையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த கிராமத்தைச் சோ்ந்த ராமதாஸ் மகன் சங்கா் (47), சுப்ரமணி மகன் வெற்றிவேல் (24) ஆகியோா், அதே கிராமத்திலுள்ள வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, வெற்றிவேலை கைது செய்த குன்னம் போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து ரூ. 19,210 மதிப்பிலான 25 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட வெற்றிவேலை சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவாகியுள்ள சங்கரை போலீஸாா் தேடி வருகின்றனா்.